ஆமாங்க!! போன வாரம் தமிழ் படம் பார்த்தேன்..! அட தமிழ் படம் பார்க்கறது எல்லாம் என்ன பெரிய விஷயமாயா ??? அப்படின்னு நீங்க கேட்கறது தெரியுது..!
ஆனா இது முழுக்க முழுக்க வித்யாசமான "தமிழ் படம்"ஏன்..? என்ன வித்தியாசம்..? அப்படிங்கறத சொல்றேன் ...
• படத்தோட ஆரம்பமே சின்னதா ஒரு எதிர்பார்போட ஆரம்பிச்சானுங்க 'கருத்தம்மா' படத்துல வர கள்ளிப்பால் மேட்டர நல்லாவே ஓட்டிருபாங்க...
• அப்பறமா ஹீரோ சீக்கிரமா பெரிய ஆளா வளரணும்னு சைகிள் ஓட்ட சொல்லி அவரோட காலை மட்டும் காட்டி வளர வச்சது
• ஹீரோக்கு நண்பர்களா எப்பவும் வர முதியவர்கள் பட்டாளம்
• நாட்டமை !!அப்பறமா அவரு சொல்ற தீர்ப்புகள் ..
• சண்டை காட்சிகள், அதுவும் ஹீரோ சர்ட்ட கொஞ்சம் உதருனாருனாலே எல்லாம் பறந்து போவாங்க , எப்பவும் போல குத்து பாட்டு !
• அப்பறமா அண்டர் கவர் ஆபரேஷன் அதுக்காக அவரு செய்ற கொலைகள்... அதுல தண்ணி தொட்டில ஒரு ரௌடிய கொல்றது , டெல்லி கணேஷ கொல்றது (நோட் பண்ண வேண்டிய விஷயம்)
• எதுக்காக 'போக்கிரி' படத்தோட மைய கதைய எடுதுக்கிடானுங்கன்னு ஒரே கொழப்பமா இருக்கு!! (படம் நல்லா தானய்யா போயிட்டு இருந்தது !!)
• முக்கியமா ஹீரோ ஒரே பாட்டுல பெரிய பணக்காரர ஆவுறது (ஒரு காபி குடிக்கிற டைம்ல ..நோட் பண்ணுங்கப்பா)
• வில்லன் வழக்கம் போல ஹீரோயனிய கடத்திட்டு போறது ... அப்பறமா ‘புல்லட்’ ஹீரோ பொறுமையா ஆட்டோ புடிச்சு காப்பாத்த வர வரைக்கும் வெயிட் பண்றது .. செம்ம காமெடி...
• 'பெரிய நடிகர்கள கலாய்கிறோம்.. பிரச்சனை வருமோ..?' அப்படின்னு யோசிக்காம நடிச்சதுக்கு சிவாவிற்கு ஒரு ஸ்பெசல் கிளாப்.
• கதாநாயகி -ஒன்னும் சொல்றதுக்கில்ல!!
நான் மேல சொன்ன காட்சிகள் எல்லாம் எனக்கு புடிச்ச காட்சிகள் தான்.... மத்தபடி படம் முதல் பாகம் ரொம்ப நல்லா இருக்கு... இரண்டாம் பாகம் “என்ன பண்றது... படத்த ஆரம்பிச்சிடோமே....!!?” அப்படின்னு கொழப்பத்துல எடுத்த மாதிரி இருக்கு!!
பி.கு : "தமிழ் படம்" குடும்பத்தோட ... இல்லனா... கும்பலோட ஒரு தடவை பார்க்கலாம் !!
பி.பி.கு : லாஜிக் / ஆங்கில படங்கள் மோகம்/ இப்படி தான் இருக்கணும்.. அப்படிங்கற ரூல்ஸ பார்க்கம பார்த்திங்கன்னா புடிக்கும்!:)
பி.பி.பி.கு : "சுறா" படத்த ஏன் தான் இப்பவே ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்கன்னு தெரில்ல .. படத்த எடுக்க விடுங்கப்பா !!;)
பி.பி.பி.பி.கு : கோவா படம் ..எப்படி இருக்கு ?
பி.பி.பி.பி.பி.கு : மேற்கண்ட விசயங்களில் நாட்டம் இல்லாதோர் தைரியத்தை வரவழைத்து கொண்டு "தைரியம்" படம் பார்க்கலாம் !! EKSI:(
Showing posts with label tamil. Show all posts
Showing posts with label tamil. Show all posts
Tuesday, February 16, 2010
Saturday, November 7, 2009
வெற்றி/ தோல்வி ...
வெற்றி/ தோல்வி
வெற்றியை ருசிக்க
வேண்டுமா ?
தோல்வியை ரசிக்க
கற்றுக்கொள் !!
*********************************************************
வெற்றியின் களிப்பில்
நீ திளைத்திருந்தால்
உன்னை தெம்பேற்ற
சில தோல்விகளும் வருகிறது ....காத்திரு...!!

Tuesday, May 12, 2009
முயன்றிடு ....! முன்னேரிடு ....! உயர்ந்திடு ....!!
முயன்றிடு ....! முன்னேரிடு ....! உயர்ந்திடு ....!!
ஏற்றம் இல்லையேல்
முன்னேற்றம் இல்லை ...!
மாற்றம் இல்லையேல்
புதுமை இல்லை ...!
குறிக்கோள் இல்லையேல்
லட்சியம் இல்லை ...!
தோல்வி இல்லையேல்
முயற்சி இல்லை ...!
இவை யாவும் இல்லையேல்
வாழ்வில் சுவாரஸ்யம் இல்லை ...!
முயன்றிடு ....! முன்னேரிடு ....! உயர்ந்திடு ....!!
-மோகன்

Wednesday, May 6, 2009
தராசு
Wednesday, April 29, 2009
தேன் - தேனீ......
தேன் - தேனீ......
தேனீ வந்து சீண்டிய பின் தான் தேன் இருப்பது பூவுக்கு தெரியும்!!!
தேன் சுவையை நாம் அறிய வேண்டுமானால்..!
அத்தேனீக்கள் தம் உயிரையும் கூட்டையும் தியாகம் செய்ய வேண்டும்!
அந்தோ தேனீ..!!:(!
(or)
பூக்களை சீண்டியதற்கு பரிசு தேன் என்று நினைத்த தேனீக்கு..
அதே தேனிற்காக தன்னையும் சீண்டுவர் பலர் என்று தெரியாமல் போனதே !!!!
அந்தோ தேனீ..!:(

Sunday, April 26, 2009
சில ஹைக்யுகள்……
மரம்
இருந்தால் நிழல்..!!
இறந்தால் நார்க்காலி!!!
பணம்
ஆம்!! பத்தும் செய்யும் இருப்பவனுக்கு ..
இல்லாதவனுக்கும் தான்.. அவன் ரத்தமும் சிறு நீரகமும் விற்றப்பின்பு !!
- மோகன்
இருந்தால் நிழல்..!!
இறந்தால் நார்க்காலி!!!
பணம்
ஆம்!! பத்தும் செய்யும் இருப்பவனுக்கு ..
இல்லாதவனுக்கும் தான்.. அவன் ரத்தமும் சிறு நீரகமும் விற்றப்பின்பு !!
- மோகன்
Subscribe to:
Posts (Atom)