Tuesday, October 5, 2010

எந்திரன் - Movie Review







பெயருக்கு ஏற்றவாறு இயந்திரத்தனம் மிக்க இந்திய தமிழ் திரைப்படம் . கடந்த மூன்று வருடங்களாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் . இவர் நடிப்பார அவர் நடிப்பாரா என்று ஆவலுடன் காத்திருந்த படம் (கமல்,ஷாருக் கான், அஜித்திற்கு நன்றி)

அமரர் சுஜாதாவின் படைப்பான 'என் இனிய இயந்திரா' டி. டி. தொலைகாட்சியில் கண்டிருப்போம், அந்த மூல கதையை கொண்டு கதாபாத்திரம் அமைத்து சூப்பர் ஸ்டாரை நன்றாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர். அவருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள் !!

சொட்டு :
*ரஜினி - படம் முழுவதும் நிறைந்து காணப்படுகிறார், அவரது உழைப்பு திரையில் தெரிகிறது .மேலே கூறிய நன்றிக்கு காரணம் ரஜினியை தவிர வேறு யாரும் இக்கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்க முடியாது
*செயற்கைத்தனம் கம்மியான கிராபிக்ஸ் காட்சிகள்
*பிரம்மாண்டம் (ஷங்கர் படம் ஆச்சே !)
*ஐஸ்வர்யா பச்சன் (சில காட்சிகளில் வயது காட்டி கொடுக்கிறது இருப்பினும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார் )
*ஏ .ஆர் .ஆர் இசை மற்றும் பாடல் காட்சிகள்
*க்ளைமாக்ஸ்

கொட்டு :
*தேவை இல்லாத சில காட்சிகள்/பாடல்கள் (கொசுவிடம் பேசுவது...)
*சந்தானம் மற்றும் கருணாஸ் (படத்தில் எதற்காக என்று தெரியவில்லை )
*இரண்டாம் பாதியின் நீளம் (சற்று கத்திரி செய்திருக்கலாம் )

பி.கு :எந்திரன்- ரசிகர்களை தன் வசம் ஈர்த்த தந்திரன் !!! DOT

பி.பி.கு : உலகம் பூரா படத்தோட ரிசல்ட் நல்லா தான் போயிட்டு இருக்கு அதுக்காக அஞ்சு நிமிசத்துக்கு ஒருக்க சன் டிவில காட்டிட்டு இருக்கானுங்க தாங்கல

பி.பி.பி.கு : படம் ரிலீஸ் ஆன முதல் நாள் பார்க்க முடியலைனாலும் ரெண்டாவது நாள் பார்த்தாச்சு - Mission accomplished

பி.பி.பி.பி.கு : மேற்கண்ட விசயங்களில் நாட்டம் இல்லாதோர் எந்திரன் டிக்கட் எடுக்கும் கௌண்டரில் நின்று "எந்திரன் மொக்கை படம் சார்" அப்படின்னு கூறலாம்... ட்ரை பண்ணி தான் பாருங்களேன்...;)