Tuesday, June 9, 2009

நடைமுறையில் உள்ள சில வழக்கங்கள்...:)

நண்பர்களே ,

நம் நாட்டில் நடைமுறையில் உள்ள சில வழக்கங்களை நகைச்சுவையாக கொடுத்துள்ளேன் படித்து மகிழுங்கள் !!:) ...

வழக்கமான அரசியல் வாசகம் (எந்த கட்சி தோற்றாலும்):

*தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் ... ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும் !!(அடங்குங்க ட டே!! )
*இது அக்கட்சியினரின் திட்டமிட்ட சதி !(ஆமா நீங்க பண்ணதே இல்ல ..!)
*நாங்கள் சிறந்த எதிர்க்கட்சியாய் இருந்து மக்களுக்காக பாடுபடுவோம் !!(ஆளு அட்ரஸ்ஸெ காணும் ....!)


வழக்கமான சினிமா வில்லத்தனம் :

*எப்பொழுதும் கதாநாயகியின் தந்தை செல்வந்தராக இருப்பார் முக்கியமாக தாதாவாக இருப்பார்
*கண்டிப்பாக ஹீரோவை அடிக்க ஆட்களை அனுப்புவார் இறுதியில் அவரே சென்று அடி வாங்குவார்
*கண்டிப்பாக கதநாயகியய் (சுமாராக இருந்தால் கூட ) கடத்தியே ஆகா வேண்டும் !!
*பின்பு கதாநாயகனிடம் அடி வாங்கி திருந்த வேண்டும் !



வழக்கமான சினிமாவில் காட்டப்படும் வாழ்கையின் முன்னேற்றம் :

ஒரே பாடலில் குடிசையில் இருந்து பளிங்கு மாளிகைக்கு சென்றுவிடுவர் ...

*நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிபாகுது......
*வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் ....
*வெற்றி கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு ....!!!! ......


வழக்கமான சினிமா ஹெரோஇசம் :

*ஊர் போற்றும் பிள்ளையாக விளங்குவது....
*கண்டிப்பாக தங்கச்சி இருக்கவேண்டும்....
*அதுவும் அந்த தங்கச்சியின் மாமியார் கொடுமை படுத்த வேண்டும் ...
*எவ்வளவு பலசாலியான எதிரியாய் இருந்தாலும் முடிவில் ஹீரோவிடம் அடிபட்டே ஆகா வேண்டும் ......
*பின்னணி இசையோடு கண்டிப்பாக 1 அல்லது 3 KM நடந்தே ஆகா வேண்டும் ...
*துப்பாக்கி சண்டையில் எவ்வளவு சுட்டாலும் ஹீரோக்கு மட்டும் ஒன்று அல்லது இரண்டு குண்டுகள் தான் பாயும் அதுவும் சரியாக கையில் தான் படும்
*வெடிகுண்டு வீசினால்... அதுவும் கார் சேசிங் என்றால் கண்டிப்பாக அது வேறுதிசையில் தான் விழும் !!
*எப்பொழுதும் கதாநாயகன் வெடிகுண்டை அது எங்கு இருந்தாலும் எளிதில் கண்டுபிடித்து விடுவார் அது மட்டும் அல்லாமல் அதன் சிவப்பு நிற வயரை துண்டித்து செயலிழக்க செய்வார் !!
*எவ்வளவு முரட்டான காளை மாடாய் இருந்தாலும் கண்டிப்பாக அது அடங்கியே ஆகா வேண்டும் ... அதற்க்கு கதாநாயகன் பாடினால் கூட சரி(பேச்சி பேச்சி பெருமையுள்ள பேச்சி .....) !!!!


வழக்கமான சினிமா போலீஸ்தனம்:

*எப்பொழுதும் துப்பாக்கியில் சுடும்போது முதலில் வானத்தை நோக்கி சுட வேண்டும் !!!
*(Major சுந்தராஜன் style) "You are under arrest" 'நான் உன்னை கைது செய்றேன்' -ர வசனத்தை எத்தன வருஷம் ஆனாலும் சொல்ல வேண்டும் !!
*எவ்வளவு பெரிய சண்டை நடந்தாலும் ஆடி அசைந்து ஹீரோ வில்லனை கொல்ல என்னும் போது வந்து தடுக்க வேண்டும் ....

-மோகன்

பி.கு : இப்பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல !!! :)அனைத்தும் நீங்கள் சிரித்து மகிழ்வதர்க்கே !!