Friday, May 22, 2009

சில சிரிப்பு வெடிகள் !!:)!!

சில சிரிப்பு வெடிகள் !!:)!!------------------------------------------------------------------------
அமெரிக்கால திருடங்கள கண்டுபுடிகுற மெஷின் ஒன்னு கண்டுபுடிச்சி இருக்காங்களாம் !!!...அந்த மெஷின் இங்கிலாந்துல 1 மணி நேரத்துல 70 திருடங்கள கண்டுபிடிச்சிருக்கு !!பிரான்சில 1 மணி நேரத்துல 80 திருடங்கள கண்டுபிடிச்சிருக்கு !!இந்தியாவில 10 நிமிஷத்துல அந்த மெஷினையே காணுமாம் !!!நம்மெல்லாம் யாரு நம்மகிட்டயேவா ?!?!
-------------------------------------------------------------------------
ஆசிரியர் : உலகை முதலில் சுற்றி வந்தது யாரு ??
மாணவன் (In Captain's Style): அட, விடுங்க டீச்சர்.... ஊர் சுத்தற பயல பத்தி, நமக்கென்ன பேச்சு...!!! (captain's trademark finish)
-------------------------------------------------------------------------
டாக்டர் : சாரி ..! உங்க கிட்னி பெயில் ஆயுடுச்சு!!! நோயாளி : என்ன கொடுமை டாக்டர் இது !?!நான் என் கிட்நீய படிக்கவைக்கவே இல்லை அதெப்படி டாக்டர் ?!?!
-------------------------------------------------------------------------
வடிவேல் : (Winner style ) தம்பி .. நாங்கதான் பெரிய காமெடியன் தெரியும்ல!!
விவேக் : இல்லை நான் தான் உன்ன விட பெரிய காமெடியன் !!
கருணாஸ் : மெதுவா பேசு மாப்ள..! பக்கத்துல <........> இருக்கார் !!!;)!
--------------------------------------------------------------------------
பி. கு : <........>இதில் உங்களுக்கு பிடித்த /ரசித்த /கலாய்த்த சினிமா பிரபலங்களை நிரப்பிக்கொள்ளலாம் !!!;)!இவை யாவும் கற்பனைக்கே மற்றும் நகைச்சுவைக்கே :)!

Tuesday, May 12, 2009

முயன்றிடு ....! முன்னேரிடு ....! உயர்ந்திடு ....!!

முயன்றிடு ....! முன்னேரிடு ....! உயர்ந்திடு ....!!

ஏற்றம் இல்லையேல்
முன்னேற்றம் இல்லை ...!

மாற்றம் இல்லையேல்
புதுமை இல்லை ...!

குறிக்கோள் இல்லையேல்
லட்சியம் இல்லை ...!

தோல்வி இல்லையேல்
முயற்சி இல்லை ...!

இவை யாவும் இல்லையேல்
வாழ்வில் சுவாரஸ்யம் இல்லை ...!

முயன்றிடு ....! முன்னேரிடு ....! உயர்ந்திடு ....!!

-மோகன்

Wednesday, May 6, 2009

தராசு



அன்புடையீர் வணக்கம் !!,:)


எனக்கு வாக்களித்த நல்லுள்ளங்களுக்கு முதற்க்கண் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் !!! இதோ ஒரு ஹைக்கூ ...!!





தராசு
இது இருப்பதோ
நீதி தேவதை கையில் ...!!
ஆனால் நீதி இருப்பதோ
இன்று... யார் கையில் ...!?!

- மோகன்