Friday, May 22, 2009

சில சிரிப்பு வெடிகள் !!:)!!

சில சிரிப்பு வெடிகள் !!:)!!------------------------------------------------------------------------
அமெரிக்கால திருடங்கள கண்டுபுடிகுற மெஷின் ஒன்னு கண்டுபுடிச்சி இருக்காங்களாம் !!!...அந்த மெஷின் இங்கிலாந்துல 1 மணி நேரத்துல 70 திருடங்கள கண்டுபிடிச்சிருக்கு !!பிரான்சில 1 மணி நேரத்துல 80 திருடங்கள கண்டுபிடிச்சிருக்கு !!இந்தியாவில 10 நிமிஷத்துல அந்த மெஷினையே காணுமாம் !!!நம்மெல்லாம் யாரு நம்மகிட்டயேவா ?!?!
-------------------------------------------------------------------------
ஆசிரியர் : உலகை முதலில் சுற்றி வந்தது யாரு ??
மாணவன் (In Captain's Style): அட, விடுங்க டீச்சர்.... ஊர் சுத்தற பயல பத்தி, நமக்கென்ன பேச்சு...!!! (captain's trademark finish)
-------------------------------------------------------------------------
டாக்டர் : சாரி ..! உங்க கிட்னி பெயில் ஆயுடுச்சு!!! நோயாளி : என்ன கொடுமை டாக்டர் இது !?!நான் என் கிட்நீய படிக்கவைக்கவே இல்லை அதெப்படி டாக்டர் ?!?!
-------------------------------------------------------------------------
வடிவேல் : (Winner style ) தம்பி .. நாங்கதான் பெரிய காமெடியன் தெரியும்ல!!
விவேக் : இல்லை நான் தான் உன்ன விட பெரிய காமெடியன் !!
கருணாஸ் : மெதுவா பேசு மாப்ள..! பக்கத்துல <........> இருக்கார் !!!;)!
--------------------------------------------------------------------------
பி. கு : <........>இதில் உங்களுக்கு பிடித்த /ரசித்த /கலாய்த்த சினிமா பிரபலங்களை நிரப்பிக்கொள்ளலாம் !!!;)!இவை யாவும் கற்பனைக்கே மற்றும் நகைச்சுவைக்கே :)!

3 comments:

Subankan said...

எப்டிசார்? நல்லா இருக்கு!

//இவை யாவும் கற்பனைக்கே மற்றும் நகைச்சுவைக்கே//

அதான் தெரியுமே! அப்புறம் சக்கரை சுரேசுக்கு டாங்ஸ் சொல்லிடுங்க. நம்ம கடைப்பக்கம் வர மறந்துடாதீங்க. word verification வேணாமே! எடுத்துடுங்க.

தீப்பெட்டி said...

:-)))

devianand181284 said...

very nice

Post a Comment