ஆமாங்க!! போன வாரம் தமிழ் படம் பார்த்தேன்..! அட தமிழ் படம் பார்க்கறது எல்லாம் என்ன பெரிய விஷயமாயா ??? அப்படின்னு நீங்க கேட்கறது தெரியுது..!
ஆனா இது முழுக்க முழுக்க வித்யாசமான "தமிழ் படம்"ஏன்..? என்ன வித்தியாசம்..? அப்படிங்கறத சொல்றேன் ...
• படத்தோட ஆரம்பமே சின்னதா ஒரு எதிர்பார்போட ஆரம்பிச்சானுங்க 'கருத்தம்மா' படத்துல வர கள்ளிப்பால் மேட்டர நல்லாவே ஓட்டிருபாங்க...
• அப்பறமா ஹீரோ சீக்கிரமா பெரிய ஆளா வளரணும்னு சைகிள் ஓட்ட சொல்லி அவரோட காலை மட்டும் காட்டி வளர வச்சது
• ஹீரோக்கு நண்பர்களா எப்பவும் வர முதியவர்கள் பட்டாளம்
• நாட்டமை !!அப்பறமா அவரு சொல்ற தீர்ப்புகள் ..
• சண்டை காட்சிகள், அதுவும் ஹீரோ சர்ட்ட கொஞ்சம் உதருனாருனாலே எல்லாம் பறந்து போவாங்க , எப்பவும் போல குத்து பாட்டு !
• அப்பறமா அண்டர் கவர் ஆபரேஷன் அதுக்காக அவரு செய்ற கொலைகள்... அதுல தண்ணி தொட்டில ஒரு ரௌடிய கொல்றது , டெல்லி கணேஷ கொல்றது (நோட் பண்ண வேண்டிய விஷயம்)
• எதுக்காக 'போக்கிரி' படத்தோட மைய கதைய எடுதுக்கிடானுங்கன்னு ஒரே கொழப்பமா இருக்கு!! (படம் நல்லா தானய்யா போயிட்டு இருந்தது !!)
• முக்கியமா ஹீரோ ஒரே பாட்டுல பெரிய பணக்காரர ஆவுறது (ஒரு காபி குடிக்கிற டைம்ல ..நோட் பண்ணுங்கப்பா)
• வில்லன் வழக்கம் போல ஹீரோயனிய கடத்திட்டு போறது ... அப்பறமா ‘புல்லட்’ ஹீரோ பொறுமையா ஆட்டோ புடிச்சு காப்பாத்த வர வரைக்கும் வெயிட் பண்றது .. செம்ம காமெடி...
• 'பெரிய நடிகர்கள கலாய்கிறோம்.. பிரச்சனை வருமோ..?' அப்படின்னு யோசிக்காம நடிச்சதுக்கு சிவாவிற்கு ஒரு ஸ்பெசல் கிளாப்.
• கதாநாயகி -ஒன்னும் சொல்றதுக்கில்ல!!
நான் மேல சொன்ன காட்சிகள் எல்லாம் எனக்கு புடிச்ச காட்சிகள் தான்.... மத்தபடி படம் முதல் பாகம் ரொம்ப நல்லா இருக்கு... இரண்டாம் பாகம் “என்ன பண்றது... படத்த ஆரம்பிச்சிடோமே....!!?” அப்படின்னு கொழப்பத்துல எடுத்த மாதிரி இருக்கு!!
பி.கு : "தமிழ் படம்" குடும்பத்தோட ... இல்லனா... கும்பலோட ஒரு தடவை பார்க்கலாம் !!
பி.பி.கு : லாஜிக் / ஆங்கில படங்கள் மோகம்/ இப்படி தான் இருக்கணும்.. அப்படிங்கற ரூல்ஸ பார்க்கம பார்த்திங்கன்னா புடிக்கும்!:)
பி.பி.பி.கு : "சுறா" படத்த ஏன் தான் இப்பவே ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்கன்னு தெரில்ல .. படத்த எடுக்க விடுங்கப்பா !!;)
பி.பி.பி.பி.கு : கோவா படம் ..எப்படி இருக்கு ?
பி.பி.பி.பி.பி.கு : மேற்கண்ட விசயங்களில் நாட்டம் இல்லாதோர் தைரியத்தை வரவழைத்து கொண்டு "தைரியம்" படம் பார்க்கலாம் !! EKSI:(
Tuesday, February 16, 2010
Subscribe to:
Posts (Atom)