Tuesday, June 9, 2009

நடைமுறையில் உள்ள சில வழக்கங்கள்...:)

நண்பர்களே ,

நம் நாட்டில் நடைமுறையில் உள்ள சில வழக்கங்களை நகைச்சுவையாக கொடுத்துள்ளேன் படித்து மகிழுங்கள் !!:) ...

வழக்கமான அரசியல் வாசகம் (எந்த கட்சி தோற்றாலும்):

*தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் ... ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும் !!(அடங்குங்க ட டே!! )
*இது அக்கட்சியினரின் திட்டமிட்ட சதி !(ஆமா நீங்க பண்ணதே இல்ல ..!)
*நாங்கள் சிறந்த எதிர்க்கட்சியாய் இருந்து மக்களுக்காக பாடுபடுவோம் !!(ஆளு அட்ரஸ்ஸெ காணும் ....!)


வழக்கமான சினிமா வில்லத்தனம் :

*எப்பொழுதும் கதாநாயகியின் தந்தை செல்வந்தராக இருப்பார் முக்கியமாக தாதாவாக இருப்பார்
*கண்டிப்பாக ஹீரோவை அடிக்க ஆட்களை அனுப்புவார் இறுதியில் அவரே சென்று அடி வாங்குவார்
*கண்டிப்பாக கதநாயகியய் (சுமாராக இருந்தால் கூட ) கடத்தியே ஆகா வேண்டும் !!
*பின்பு கதாநாயகனிடம் அடி வாங்கி திருந்த வேண்டும் !



வழக்கமான சினிமாவில் காட்டப்படும் வாழ்கையின் முன்னேற்றம் :

ஒரே பாடலில் குடிசையில் இருந்து பளிங்கு மாளிகைக்கு சென்றுவிடுவர் ...

*நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிபாகுது......
*வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் ....
*வெற்றி கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு ....!!!! ......


வழக்கமான சினிமா ஹெரோஇசம் :

*ஊர் போற்றும் பிள்ளையாக விளங்குவது....
*கண்டிப்பாக தங்கச்சி இருக்கவேண்டும்....
*அதுவும் அந்த தங்கச்சியின் மாமியார் கொடுமை படுத்த வேண்டும் ...
*எவ்வளவு பலசாலியான எதிரியாய் இருந்தாலும் முடிவில் ஹீரோவிடம் அடிபட்டே ஆகா வேண்டும் ......
*பின்னணி இசையோடு கண்டிப்பாக 1 அல்லது 3 KM நடந்தே ஆகா வேண்டும் ...
*துப்பாக்கி சண்டையில் எவ்வளவு சுட்டாலும் ஹீரோக்கு மட்டும் ஒன்று அல்லது இரண்டு குண்டுகள் தான் பாயும் அதுவும் சரியாக கையில் தான் படும்
*வெடிகுண்டு வீசினால்... அதுவும் கார் சேசிங் என்றால் கண்டிப்பாக அது வேறுதிசையில் தான் விழும் !!
*எப்பொழுதும் கதாநாயகன் வெடிகுண்டை அது எங்கு இருந்தாலும் எளிதில் கண்டுபிடித்து விடுவார் அது மட்டும் அல்லாமல் அதன் சிவப்பு நிற வயரை துண்டித்து செயலிழக்க செய்வார் !!
*எவ்வளவு முரட்டான காளை மாடாய் இருந்தாலும் கண்டிப்பாக அது அடங்கியே ஆகா வேண்டும் ... அதற்க்கு கதாநாயகன் பாடினால் கூட சரி(பேச்சி பேச்சி பெருமையுள்ள பேச்சி .....) !!!!


வழக்கமான சினிமா போலீஸ்தனம்:

*எப்பொழுதும் துப்பாக்கியில் சுடும்போது முதலில் வானத்தை நோக்கி சுட வேண்டும் !!!
*(Major சுந்தராஜன் style) "You are under arrest" 'நான் உன்னை கைது செய்றேன்' -ர வசனத்தை எத்தன வருஷம் ஆனாலும் சொல்ல வேண்டும் !!
*எவ்வளவு பெரிய சண்டை நடந்தாலும் ஆடி அசைந்து ஹீரோ வில்லனை கொல்ல என்னும் போது வந்து தடுக்க வேண்டும் ....

-மோகன்

பி.கு : இப்பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல !!! :)அனைத்தும் நீங்கள் சிரித்து மகிழ்வதர்க்கே !!

30 comments:

MoHaN said...

எனக்கு வாக்களித்த நல்லுள்ளங்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன் !!!:)!

நட்புடன் ஜமால் said...

\\நெடு தூர பயணத்தின் ..... தொடக்கத்தில் நான் ....\\

நடை முறையில் சில வழக்கங்கள்

ஏனுங்க நடக்குற முறை சொல்லித்தர போறியளா

மிலிட்டரிங்களா ...

Subankan said...

ஹா ஹா, சூப்பர். நல்ல ரசனைதான் உங்களுக்கு. ரெண்டிலயும் ஓட்டுப் போட்டாச்சு. நேரம் கிடைக்கிறப்ப நம்ம பக்கமும் வாங்க .

கடைக்குட்டி said...

//பி.கு : இப்பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல !!! :)அனைத்தும் நீங்கள் சிரித்து மகிழ்வதர்க்கே !!
//
இதுல யாருங்க தப்பா நெனச்சுக்க போறா???

:-)

கடைக்குட்டி said...

comment verification தூக்குங்க....

நல்லா ஜாலியான பதிவு.. இன்னும் நெறயா நெறயா இப்பிடி எழுதுங்க... (உங்க கெமெண்டுகள் நல்லா இருக்கு)

ப்ரபலமாகனுமா?? நம்ம சக்கர ய திட்டி ஒரு பதிவு போடுங்க... (சும்மா ஜாலிக்கி..:-)

கடைக்குட்டி said...

இங்க நன்றியெல்லாம் சொல்ல வேணாம் எனக்கு..

எங்கடைக்கி வந்து மொய் வெச்சுடுங்க :-)

வர்டா...

தீப்பெட்டி said...

நல்லா சொல்லியிருக்கீங்க..

தமிழ் மணத்துலயும், தமிழிஷ்லயும் இணைச்சீங்கன்னா இன்னும் நெறய பேரு பார்ப்பார்கள்..

வழ்த்துகள் மோகன்..

தீப்பெட்டி said...

பின்னூட்டத்திற்கு word verification ஐ நீக்கிவிடுங்கள்..

Suresh said...

//*தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் ... ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும் !!(அடங்குங்க ட டே!! )
*இது அக்கட்சியினரின் திட்டமிட்ட சதி !(ஆமா நீங்க பண்ணதே இல்ல ..!)
*நாங்கள் சிறந்த எதிர்க்கட்சியாய் இருந்து மக்களுக்காக பாடுபடுவோம் !!(ஆளு அட்ரஸ்ஸெ காணும் ....!)//

ஹா ஹா பிராக்கெட் மேட்டர் சூப்பர் ஹீ ஹீ நல்ல நகைச்சுவை உணர்வு மோகன் தொடர்ந்து எழுது என் நணப்ர்கள் எல்லாம் வந்து பின்னூட்டம் போட்டு இருக்காங்க ரொம்ப சந்தோசம்..

Suresh said...

//(சுமாராக இருந்தால் கூட ) கடத்தியே ஆகா வேண்டும்/

ஹீ ஹீ

Suresh said...

//*பின்னணி இசையோடு கண்டிப்பாக 1 அல்லது 3 KM நடந்தே ஆகா வேண்டும் ...
*துப்பாக்கி சண்டையில் எவ்வளவு சுட்டாலும் ஹீரோக்கு மட்டும் ஒன்று அல்லது இரண்டு குண்டுகள் தான் பாயும் அதுவும் சரியாக கையில் தான் படும்
*வெடிகுண்டு வீசினால்... அதுவும் கார் சேசிங் என்றால் கண்டிப்பாக அது வேறுதிசையில் தான் விழும் !!
*எப்பொழுதும் கதாநாயகன் வெடிகுண்டை அது எங்கு இருந்தாலும் எளிதில் கண்டுபிடித்து விடுவார் அது மட்டும் அல்லாமல் அதன் சிவப்பு நிற வயரை துண்டித்து செயலிழக்க செய்வார் !!/

இது எல்லாமே டாப்பு கமெண்ட் வெரிபிக்கேஷனை தூக்க மச்சான் கமெண்ட் போட கஷ்டமா இருக்கு

எல்லா பதிவு இல்லாடியும் உன் பதிவுக்கு வரும் நண்பர்களின் பதிவை படி பின்னூட்டம் போடு, எல்லாத்துக்கும் ஒவொட்ட போடு

தரமா ஜாலியா இது மாதிரி எழுது கண்டிப்பா உன் கடைக்கு கல்லா நிறம்பும்

Joe said...

நல்ல நகைச்சுவையான பதிவு.
தொடர்ந்து கலக்குங்க.

எழுத்துப் பிழைகளை சரி செய்தால் நல்லது.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல நகைச்சுவையான பதிவு...:-))))

S.A. நவாஸுதீன் said...

வழக்கமான அரசியல் வாசகம் (எந்த கட்சி தோற்றாலும்):

*தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் ... ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும் !!(அடங்குங்க ட டே!! )
*இது அக்கட்சியினரின் திட்டமிட்ட சதி !(ஆமா நீங்க பண்ணதே இல்ல ..!)
*நாங்கள் சிறந்த எதிர்க்கட்சியாய் இருந்து மக்களுக்காக பாடுபடுவோம் !!(ஆளு அட்ரஸ்ஸெ காணும் ....!)

ஹா ஹா ஹா அரசியல்ல இதெல்லாம் சகஜம் நண்பா

S.A. நவாஸுதீன் said...

*எப்பொழுதும் கதாநாயகியின் தந்தை செல்வந்தராக இருப்பார் முக்கியமாக தாதாவாக இருப்பார்
*கண்டிப்பாக ஹீரோவை அடிக்க ஆட்களை அனுப்புவார் இறுதியில் அவரே சென்று அடி வாங்குவார்
*கண்டிப்பாக கதநாயகியய் (சுமாராக இருந்தால் கூட ) கடத்தியே ஆகா வேண்டும் !!
*பின்பு கதாநாயகனிடம் அடி வாங்கி திருந்த வேண்டும் !

கிளைமாக்ஸ்ல போலீஸ் வர்றமாதிரி இதுவும் இந்திய திரைப்படங்களின் எழுதப்படாத சட்டங்கள்.

MoHaN said...

@Jamal:
ஏனுங்க நடக்குற முறை சொல்லித்தர போறியளா

மிலிட்டரிங்களா ...//தங்களுக்கு அறியாததா அண்ணே !!!:)

MoHaN said...

@Subankan:ஹா ஹா, சூப்பர். நல்ல ரசனைதான் உங்களுக்கு. ரெண்டிலயும் ஓட்டுப் போட்டாச்சு. நேரம் கிடைக்கிறப்ப நம்ம பக்கமும் வாங்க .//

மிக்க நன்றி ..வந்தேன் தெரிந்து கொண்டேன் !!!:)

MoHaN said...

@ KADAIKUTTI : இதுல யாருங்க தப்பா நெனச்சுக்க போறா???//பல பேரு இதுல இருக்கிறது நாலா தான் !!:)

நல்லா ஜாலியான பதிவு.. இன்னும் நெறயா நெறயா இப்பிடி எழுதுங்க... (உங்க கெமெண்டுகள் நல்லா இருக்கு)//கண்டிப்பா !! நன்றிகள் பல!!!:)

ப்ரபலமாகனுமா?? நம்ம சக்கர ய திட்டி ஒரு பதிவு போடுங்க... (சும்மா ஜாலிக்கி..:-)//ஹி ஹி !!! முயற்சி பண்றேன் !!;) சும்மா ஜாலிக்கு !!!;)

எங்கடைக்கி வந்து மொய் வெச்சுடுங்க :-)
வர்டா...//வச்சாசுங்க ... ஆனா மொய் பணத்துல பாதி வேணும் பரவ இல்லையா !??;)!! மறுபடியும் வாங்க!! :)

MoHaN said...

@ தீப்பெட்டி:
நல்லா சொல்லியிருக்கீங்க..//மிக்க நன்றி ..:)

பின்னூட்டத்திற்கு word verification ஐ நீக்கிவிடுங்கள்..//ஓஹ் ஆச்சு!!!!:)!!

MoHaN said...

@Suresh:
ஹா ஹா பிராக்கெட் மேட்டர் சூப்பர் ஹீ ஹீ நல்ல நகைச்சுவை உணர்வு மோகன் தொடர்ந்து எழுது என் நணப்ர்கள் எல்லாம் வந்து பின்னூட்டம் போட்டு இருக்காங்க ரொம்ப சந்தோசம்..//மிக்க நன்றி ..:)...உங்கள் ஊக்கம் என்றும் தேவை !!!!:)

MoHaN said...

@Suresh:
தரமா ஜாலியா இது மாதிரி எழுது கண்டிப்பா உன் கடைக்கு கல்லா நிறம்பும்//மிக்க மகிழ்ச்சி முயற்சிக்கிறேன் !!!!:)

MoHaN said...

@Joe:
நல்ல நகைச்சுவையான பதிவு.
தொடர்ந்து கலக்குங்க.
எழுத்துப் பிழைகளை சரி செய்தால் நல்லது.// நன்றிகள் பல!!!:)Joe..கண்டிப்பா !!

MoHaN said...

@கார்த்திகைப் பாண்டியன்:

மிக்க நன்றி ...மிக்க மகிழ்ச்சி :)!!

MoHaN said...

@S.A. நவாஸுதீன்:

ஹா ஹா ஹா அரசியல்ல இதெல்லாம் சகஜம் நண்பா//இவிங்க எப்பவுமே இப்படிதான் போல!!!:):)
இந்திய திரைப்படங்களின் எழுதப்படாத சட்டங்கள்..//ஆமா எத்தன வருஷம் ஆனாலும் அதே தான் பண்றாங்க ...!நன்றி:)!

வினோத் கெளதம் said...

//பின்னணி இசையோடு கண்டிப்பாக 1 அல்லது 3 KM நடந்தே ஆகா வேண்டும் ...//

இது சரியான காமெடி..தொடர்ந்து கலக்குங்க..வாழ்த்துக்கள்..

MoHaN said...

@vinoth and Tamilers!!

Mikka nandri !!:)!!

Veera said...

ஹா.ஹா.ஹா. ஹி.ஹி.ஹி. ஹூ.ஹூ.ஹூ.

Arun said...

வழக்கமான சினிமா ஹெரோஇன்:

- ஹெரோஇன் பிரிஎண்ட்ஸ் அனைவரும் அவளை விட அழு கு குறைந்தவர்களாக இர்ருப்பஅர்கள்

- எவள்ளவ்வுதான் சோகமான காட்சிஇல் அவர்கள் நடித்தாலும் அவர்கள் முகத்தில் உள்ள மேக்கப் மற்றும் அப்படியே இர்ருக்கும்

- அவரகள் பணக்காரர்கலக இர்ருந்தாள் நாட்டில் நல்ல பணக்கார பசங்க இர்ருந்தாலும் நல்ல ஏழை பசங்க லை தேடி பிடித்து காதல் செய்வார்கள் . அதில் அவர்களக்கு அப்படி ஒரு கிக்கு :)

cheena (சீனா) said...

அன்பின் மோகன்

வழக்கமான பல செயல்கள் - மறந்து போகக்குடாதுன்னு இப்படி ஒரு இடுகையா - வாழ்க
நல்வாழ்த்துகள் மோகன்
நட்புடன் சீனா

jillthanni said...

வழக்கம் போல் செய்திகள் சிரிப்பு தான் வருது
நம்ம மக்கள நினைச்சா

நன்றி,தொடருங்கள்

Post a Comment