Saturday, July 24, 2010

நாங்கெல்லாம் உலக மகா குக்கு….. குக்கு… குக்கு


நாங்கெல்லாம் உலக மகா குக்கு….. குக்கு… குக்கு ....(Echo effect..)




வணக்கம்,!!


சமையல் ஒரு அருமையான விஷயம். அதை மிக அழகாக, நேர்த்தியாக செய்தால் அதற்க்கு மதிப்பே ஜாஸ்தி! எனக்கு விவரம் தெரிஞ்சு, அப்படி ருசியா, அழகா சமைக்கிறது எங்க அம்மா, அப்புறம் எங்க அக்கா..!!!

போன மாசம் அந்த அதிசயம் நடந்தது ... !

எங்களுக்கு வழக்கமா வார இறுதி நாட்கள்ல சாப்பாடு ஏற்பாடு பண்ணி தர கேடரர் அவரோட மாமியாருக்கு உடம்பு சரி இல்லன்னு அவங்க வீட்டுகரம்மா வெலக்கமாத்தாலயெ அடிச்சு தர தரன்னு கூட்டிட்டு போறங்கன்னு ரொம்ப வருத்தமா போன் போட்டு வெள்ளிக்கிழமை சாயங்காலம் சொன்னாரு ...


என் ரூம் மேட்சும் ஊருக்கு போய்ட்டாங்க ..இப்படி பல தடவ நடந்த்ருக்கு ஆனா எனக்கென்னவோ நம்மளும் ஏன் சமைக்க கூடாதுன்னு தோனுச்சு ..என் நெருங்கிய நண்பர் பெங்களூர்ல வேலை பாக்குறார் அவரு தான் இதுக்கு தூண்டுகோல்.. அவரு வச்ச சாம்பார் அப்றமா உருள கிழங்கு பொரியல் டாப்பு !!


சரி இப்போ சம்சாரத்துக்கு வருவோம் ..ச்சே சமாசாரத்துக்கு வருவோம் ...!

சனிக்கிழமை காலைலயே நம்ம ஆராய்ச்சிய ஆரம்பிக்கலாம்னு இருந்தேன், அதாங்க சமைச்சு பார்த்துருவோம்னு தான். என்ன பண்ணலாம்னு யோசிக்கறப்போ ..?


"சிக்கல்கள் பலவாயினும் அதை தீர்க்கும் உன்னதம் உனது தன்னம்பிக்கையே !!"


அப்படின்னு தோனுச்சு !!

மாகி பக்கெட் ரெண்டு வாங்கிட்டு வந்தேன் கூடவே வெங்காயம் ,தக்காளி , மிளகாயும் !!

எங்க பாச்சலர் ரூம்ல என் ரூம்மேட்டு ஒருத்தர் தான் வீட்டிலேயே சமச்சி சப்பிடராரு அதனால சமயகட்ட ரொம்ப சுத்தமா பக்கவா வச்சிருப்பாரு நாங்க வெறும் தண்ணி குடிக்க மட்டும் தான் அந்த பக்கம் எல்லாம் போறது .. இப்போ தான் ஒரு போர்களத்துக்கு போற எப்பக்டுல போனேன் .

சென்னைல வீட்டுல முன்ன ஒருக்க தோசை சுடுறேன்னு கொத்து தோசை சுட்டு அம்மாகிட்ட தோசை வாங்கினது எல்லாம் கண்ணுமுன்னாடி வந்துட்டு போச்சு..!


சரி ஒரு கை பார்ப்போமேன்னு நம்பி ஆரம்பிச்சேன் !


வாங்கிட்டு வந்த வெங்காயத்த நறுக்க ஆரம்பிச்சேன் அப்போ வந்த கண்ணீருல நான் போட்ட டி ஷர்ட்டே நனஞ்சிருச்சு !! யப்பா சாமிகளா கண்ணுல தண்ணி வராம வெங்காயத்த நறுகரதுக்கு எதாவது மிஷின் கண்டுபுடிச்சி இருந்தா சொல்லுங்கப்பா !! அவ்வ முடியல !!! :(

அடுத்த கட்டமா அடுப்புகூட சண்டை போட ரெடி ஆனேன்!ஆரம்பமே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது .!!

நானும் ஸ்டவ் lighttara எடுத்து பர்னேர் மேல வச்சு நாப் தொறந்து கொளுத்தி பார்த்தேன்.. அடுப்பு பத்தவே இல்ல!!


அப்பறமா தான் தோனுச்சு சிலிண்டர ஆப் பண்ணி வச்சி இருபாங்களேன்னு ..! அதே மாறி ஆப் ஆகி இருந்தது !அத ஆன் பண்ணிட்டு ஒரு பெரு மூச்சு விட்டேன். (பாதி சமையல் முடிஞ்சா மாறி )

கொஞ்சம் எண்ணைய ஊத்தி நறுக்குன வெங்காயத்தையும் தக்காளியையும் வதக்க ஆரம்பிச்சேன் ...


அடுப்பு எந்த லெவெல்ல இருக்குன்னு தெரில்ல (வலது பக்கம் திருப்புணா கம்மியாவுமா?!? இல்ல எடதான்னு ?!?!) போட்ட ரெண்டாவது நிமிஷமே குபு குபுன்னு ஊட்டி ரயில் இன்ஜின் மாறி அப்படி ஒரு புகை !! கூடவே கருகுற மாதிரி ஒரு வாசனை வேற ... எப்படியோ அடுப்பு எரியரத கம்மி பண்ணிட்டு அதுல நாலு தம்ப்ளர் தண்ணிய ஊத்தினேன் (பாகெட்டுல அப்படி தான்ப்பா போட்ருந்தாங்க!!).


அடுத்த கட்டமா… அரசியல்வாதிங்க வாக்குறுதி மாறி “ரெண்டே நிமிசத்துல செஞ்சிறலாம் சமையல“ அப்படிங்ற விளம்பரத்த நம்பி …

மாகி பாகெட்டுல இருக்குற மசாலா பொடிய போட்டுட்டு அந்த நூடல்சையும் அதுல போட்டுட்டு.... "மணல் கயிறு" படத்துல சாந்தி கிருஷ்ணா சமையலுக்கு நம்ம விசு உதவி பண்ணுவாருல அது மாறியே என்னென்ன வாங்கிட்டு வந்திருந்தேனோ எல்லாத்தையும் அதுல போட்டு ஒரு தட்ட போட்டு மூடி என் இஷ்ட்டதெய்வத்த வேண்டிகிட்டேன் ...!


ஒரு அஞ்சு நிமிஷம் ஆச்சு அப்போ கூட சரியாய் வேகல அதனால இன்னுமொரு அஞ்சு நிமிஷம் கழிச்சு எடுத்து பார்த்தேன் நான் எதிர்பார்த்தமாறியே அடிபாகம் எல்லாம் கருகி வந்த்ருந்தது .

ஒரு வழியா மலைய சாச்சா மகிழ்ச்சில எடுத்து சாப்பிட்டு பார்த்தேன் .ஓர் அளவுக்கு சாப்பிடற மாறியே இருந்தது !! பரவைல்லையே நீயும் சமைக்க கத்துகிட்டியென்னு எனக்குள்ளே சொல்லிக்கிட்டு சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தேன் !!

பி.கு : சமையல் கலை வல்லுனர்கள் மன்னிக்கவும்....சில பல டிப்ஸ் கொடுதிங்கன்னா நல்லாவும் இருக்கும்....

பி.பி.கு : வேலை காரணமா வெளியூர்ல தங்கி இருக்கும் மக்கள் இது மாதிரி பல வீர செயல்கள் எல்லாம் பண்றது உண்டு ..நீங்க பண்ண சாகசத்தை கூட பகிர்ந்துக்கலாமே ..!!:)

பி.பி.கு :மேற்கண்ட விசயங்களில் நாட்டம் இல்லாதோர்அடுத்த விஜய் படம் எந்த படத்தோட ரீமேக்கா இருக்கும் என ஆராயலாம் ... EKSI ..:(